இயேசுவே ஜீவ ஒளி
இருளின் பிடியில் யாரும் இனிமேல் இருக்க வேண்டியதில்லை. இயேசுவால் உங்கள் வாழ்வு ஒளி வீசட்டும்.
ஒவ்வொரு நாளும் கவலை, பயம், குழப்பத்துடனே பலருக்கும் விடிகிறது. பகலின் வெளிச்சத்திலும், வாழ்வு இருண்டதாக தோன்றுகிறது - ஆனால் இருளின் பிடியில் யாரும் இனிமேல் இருக்க வேண்டியதில்லை.
ஏனென்றால், நம் இருளகற்ற ஒரு வெளிச்சம் உதித்துள்ளது - மாறாத, மங்காத, மறையாத அந்த வெளிச்சம் தான் இயேசு.
மனித வரலாற்றில் வந்தவர், தம் வாழ்வின் மூலம் அனைவரையும் பிகாசிக்க செய்கிறார். பைபிள் சொல்கிறது: அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது; எல்லா மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி இயேசு.
அவர் உங்கள் வாழ்வில் வரும்போது, உங்கள் இருள் மறையும்.
பயம் ஓடிவிடும்.
வாழ்க்கை பயணத்தில் வெளிச்சம் வீசும்.
உங்கள் வாழ்வின் இருளகற்ற அவரை அழைக்கலாமே?
“இயேசுவே, என் உள்ளத்தில் வாரும்; உம் வெளிச்சத்தால் என் வாழ்வை பிரகாசியும்" என்று கேளுங்கள்.
இயேசுவால் உங்கள் வாழ்வு ஒளி வீசட்டும்.