நான் உங்களோடு இருக்கிறேன்
உங்கள் பிரச்சனைகளின் போது நீங்கள் தனிமையாக உணர்கிறீர்களா? நீங்கள் எதை எதிர்கொண்டாலும் நான் உங்களுடன் இருக்கிறேன் என்று இயேசு கூறுகிறார்.
சிலுவை மரணம் இயேசுவுக்கு முடிவல்ல; இயேசு உயிர்த்தெழுந்தது பயத்திற்கும், தோல்விக்கும் சிறைப்பட்டு போனவர்களை விடுவித்து, ஒரு புதிய வாழ்வையும் நம்பிக்கையையும் கொடுக்கவே.
"நான் உங்களோடு இருக்கிறேன்" என்ற சொன்ன உயிர்த்தெழுந்த இயேசு, 2000 ஆண்டுகளாக பலர் பிரச்சனைகளுக்கு தீர்வளித்திருக்கிறார்.
இயேசு நம்பிக்கையில்லா வாழ்விற்கு பதிலாக, முடிவில்லா நம்பிக்கையை தருகிறார். உங்கள் பயணத்தை எளிதாக்குவார், எந்த இருட்டையும் வெளிச்சமாக்குவார்.
நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் உள்ளபடியே இயேசுவிடம் வந்து வெற்றிநடை போடுங்கள்.