இயேசு தரும் சுதந்திரம்
சுதந்திரம், என்றால் வெளிப்புற அடக்குமுறையிலிருந்து விடுதலை என்போம். ஆனால், நம்மோடு போராடும் ஓர் அரக்கன் நமக்குள் உண்டு.
சுதந்திரம், என்றால் வெளிப்புற அடக்குமுறையிலிருந்து விடுதலை என்போம். ஆனால், நம்மோடு போராடும் ஓர் அரக்கன் நமக்குள் உண்டு. நமது மனப்பான்மை, கோபம், காமம், பொறாமை, மற்றும் எரிச்சல் போன்றவை நம், எண்ணங்களை அடக்கி, செயல்களை ஆட்டிப்படைப்பதே சாட்சி.
அதனால் தான் நாம் செய்ய விரும்பாத பல செயல்களைச் செய்து வருகிறோம். தவறு எந தெரிந்தும் பலவற்றை விட முடியாமல் வாடுகிறோம். மறுக்கமுடியாதது என்னவென்றால், இதிலிருந்து நாமாக விடுபட முடியாது, ஆகவே, உள்ளான சுதந்திரம், நம் உண்மை தேவை நமக்கு.
இதோ ஒரு விடுதலையின் செய்தி: உங்களை முழுமையாக, புரிந்து அறிந்து இருக்கிற விடுதலை நாயகர் இயேசு, தீமையின் பிடியிலிருந்து விடுவித்து, உங்களுக்கு புத்தம்புது விடுதலை வாழ்வை தருகிறார்.
மன அமைதி, நல்ல உறக்கம், நல்ல உறவுகள் உங்கள் சொந்தமாகும்.
இயேசுவிடம் வருவோருக்கு ஒவ்வொரு நாளும் சுதந்திர தினமே! உள்ளிருந்து தொடங்கும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க இயேசுவிடம் வாருங்கள்.