மீண்டும் இயேசு வருகிறார்
வந்தவர் மீண்டும் வருகிறார்
உங்கள் வாழ்க்கையின் புதிர்களை என்றாவது நினைக்காமல் இருந்ததுண்டா? உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதிலையும், உங்கள் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வும் தரும் ஒருவர் உங்கள் கதவை தட்டிக்கொண்டிருக்கிறார் என்றால் எப்படி உணர்வீர்கள் என்ன செய்வீர்கள்?
2000 ஆண்டுகளுக்கு முன் 'மக்களைத் தேடி வந்த இயேசு கடவுளின்' மனித அவதாரம் தான் அனைவருக்குமான கிறிஸ்துமஸ் செய்தி . தம் சாயலில் நம்மைப் படைத்த கடவுள் நம்மைக் காப்பாற்றவும், தம்முடைய பிரசன்னத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ளவும் ஒரு குழந்தையாகப் பிறக்க, நம்முடைய நிலைக்குத் தாழ்த்தி, நம்முடன் தம்மை அடையாளப்படுத்துகிறார்.
நமக்கு(ள்) என்ன நடக்கிறது என்பதை அறிந்து, உண்மையான சுதந்திர வாழ்க்கைக்கு நம்மை உயர்த்துவதே அவர வருகையின் நோக்கம். இரட்சகரான அவர் நம்மை எவ்வித அடிமைத்தனம், போதை, அல்லது தீங்கான உறவுகளிலிருந்தும் நம்மை விடுவித்து, நம் வாழ்க்கையை மீண்டும் அழகாக உருவாக்க முடியும். நாம் அவரை நம்பும்போது அவர் நம்முடன் வாழ்வில் பயணிக்கிறார்.
பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்து, ஒரு நினைவாகச் சுருங்கிப் போகும் வேளையில், பிறந்து, வாழ்ந்து, சிலுவையில் மரித்து, இந்த வாழ்வின் எல்லா முரண்பாடுகளையும் வென்று மீண்டும் உயிர்த்த இயேசுவை கிறிஸ்துமஸ் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. தம்மை நம்பும் அனைவருக்கும் அந்த வெற்றியை வழங்க அவர் தயாராக இருக்கிறார்.
இப்போது, அவர் தன் மீது நம்பிக்கை வைப்பவர்களை தீவிர அக்கறையோடு பராமரிக்கிறார்; மேலும் அவர்களின் மறுவுலக வாழ்வுக்கான இடங்களைத் தயார் செய்கிறார். எந்நேரமும் அவர் தம் மக்களை அங்கு அழைத்துச் செல்ல வருவார்.
இயேசுவின் முதல் வருகை எளிமையாகவும் அமைதியாகவும் இருந்தது. ஆனால், அவரது இரண்டாவது வருகை அபார மகிமையுடன் இருக்கும்.
அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள். (மாற்கு 13:26)
அவர் மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள், (மத்தேயு 25:31-32)
அவரை தங்கள் வாழ்க்கையில் வரவேற்றவர்களை அவர் முடிவிலில்லாத மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கைக்குள் வரவேற்பார்.
உங்கள் பதிலுக்காக கதவை தட்டிக்கொண்டிருக்கும் அவருக்கு உங்கள் பதில் என்ன?
மேலும் அறிய எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.